3 மணி நிலவரப்படி 60.40% வாக்குகள் பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. அனல் பறந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில் 121 தொகுதிகளில் கடந்த 6ம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதைத் தொடர்ந்து 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுறுப்படன் நடைபெற்று வருகிறது. மோதிஹாரி, பூர்னியா, ஹர்சிதி, ஜஞ்சர்பூர், ரோஹ்தாஸில் உள்ள மத்தி பள்ளி கோனார் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.  2ம் கட்ட தேர்தலில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 12 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Night
Day